அவன் வாழ்க்கை
கொக்கரக்கோ கூவையிலே
கோலமிடுவாள் கோமலவள்ளி
குக்கூக்கூ கூவையிலே
துயிலெழுவான்
கோபாலன்
துள்ளியோடும்
காளையோடு
பிள்ளையோடு சென்றிடுவான்
– கழனிக்குப்
பிள்ளையோடு சென்றிடுவான்.
தந்தைக்கு முத்தமிட
நெற்கதிர்கள்
வளைந்து நிற்கும்.
அன்போடு அரவணைக்க
இன்முகத்தோடு
நீர் வார்ப்பான்.
முத்துப்பனி கொடுமையிலிருந்து
முழுதாக நீங்கிடவே
முதல்வனை நோக்குகிறான்
– உழவன்
முதல்வனை நோக்குகிறான்.
கட்டுக் கட்டாய்
கத்தை கட்டி
கழனியிலே மூட்டை
கட்டி
முத்து முத்தாய்ப்
பணம் சேர்ப்பான்
மூன்று நாளும்
விழா வைப்பான்.
பொங்கல் எனும்
திருநாளில்
பொங்கி வரும்
கடலலையும் – இவன்
பொங்கலிலே மறைந்து
நிற்கும்.
பின் அவன்,
கொண்டவளின் கழுத்துக்குக்
கொத்து மாலை தங்கத்திலே.
மேனி பட்டதாலே
பருத்தி ஆடை
ஜொலி ஜொலிக்கும்
இன்பம் எனும்
கடலினிலே
அவன் வாழ்க்கைப்
படகு செல்லும்.
Comments
Post a Comment