விலகாதே


உயிரே விலகாதே உயிரை மறவாதே

கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தால்

கருணை பிறவாதோ? – உயிரே

கருணை பிறவாதோ.

 

ஆழித் துரும்பாய் அலைகடலினானேன்

ஆரூயிரே வருவாயோ – உயிரே

ஆருயிர் காக்க வருவாயோ?

 

அன்னமிட்ட கைகளிலே அணைத்திருக்க நானிருந்தேன்

வண்ண வண்ண விளக்கேற்றி

என் வீட்டிற்கு வருவாயோ?

 

அழகினுக்கே வடிவம் தந்து

அதனினிலே மயங்க வைத்தாய்

மயக்கத்திலே பிரிவு வந்து

மன்மதனை வாட்டுதம்மா

 

நிலவினிலே வீடமைத்து

நித்திரைக்கு நானழைத்தேன்

சித்திரையில் உனதுமுகம்

சிந்தனையில் விழுந்ததம்மா

 

கனவினிலே கோட்டை கட்டி

கதவு இன்றி காத்து வந்தேன்

கள்ளக் காற்று உட்புகுந்து

கனவுக் கோட்டையை இடிக்குதம்மா

 

திரைதனிலே உன்முகத்தைச் சிறை வைத்தாய்

சிறையினிலே என்மனதை அடகு வைத்தேன்

அடகு வைத்த மனதுக்கு அடைக்கலமில்லை

அடங்காத ஆசைக்குத் தூக்கமுமில்லை.

 

சூரியனின் கண்பட்டதால்தான்

சூரிய காந்தியும்

தன்னிதழ்களை விரித்து

வரவேற்பளிக்கிறது.

 

என் பார்வை

உன் மேனியை

அலங்கரிக்கும் போதுதானே

உன் இதழில்

நாணப் புன்னகையைக் கண்டேன்.

 

இன்று, புன்னகையை

எங்கே அடகு வைத்தாய்?

உன் பூவெழிலைச்

சுட்ட நெருப்பு எங்கே?

உன் பார்வைக்குத் தடைவிதித்தது

இமைகளா? இல்லை இடைகளா?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா