மரமே உனக்கு உல்லாசம்
பகலோனின் வெப்பம் தாங்காமல்
நாங்கள் விடும்
மூச்சிலே
காற்று வாங்கவா
உன்னாடையை அவிழ்க்கின்றாய்.
அவிழ்த்துப் போட்ட
ஆடைகளுக்கு
அடுப்புகள் இங்கே
அபயம் கொடுக்கின்றன.
உல்லாசக் காற்றிலே
கடன் வாங்குவதற்கென்றே
நாங்கள் வருகின்றோம்.
எங்களுக்காக,
கொடுத்தே சிவந்த
கரமென்பதால்
உன் தலையையேன்
மொட்டையடித்துக்
கொள்கின்றாய்.
எங்கள் நாட்டு
இளையவர்களுக்குப்
பஞ்சு மெத்தையானதே
– உன்
உதிர்ந்த இலைகள்.
அதனால்தான்
காதல் ஓவியம்
படைக்க பாவம்
உன் காலடியில்
அமர்கின்றனர்.
அஜந்தா ஓவியம்
படைத்த
கலைச் சித்தனும்
உனக்குச் சொந்தமானவனோ?
சிறைச்சாலை கைதிக்கு
முத்திரையிடுவது
போல்
தங்கள் ஞாபகத்திற்காக
உன் முதுகையே
பலகையாக்கிக்
கொள்கின்றார்களோ?
காற்றிலாடும்
உன்
கை விரல்களில்
இருந்துதான்
நடனங்கள் பிறந்தனவோ?
சலசலப்பு ஓசையிலிருந்துதான்
குயில்களும் கூவுவதற்குக்
கற்றுக் கொண்டனவோ?
பெருங்காற்றால்
நீ
அவதிப்படும் போதுதான்
துன்பமே அறிமுகமானதோ
உன்னை வேரெடுக்கும்
போதுதான்
பிணக்குழிக்கு
இலக்கணமே கண்டனரோ
நீயுண்டாக்கும்
புதிய கிளைகளிலிருந்துதான்
மக்களினப் பெருக்கத்திற்கு
மகத்தான வழி கண்டனரோ
தென்றல் காற்றை
அனுபவிக்கும்
போதுதான்
அச்சத்திற்கு
விடுதலை வந்ததோ?
உன் வாசமில்லா
மலருக்கும்
தென்றல் ஏன்
போட்டிப் போடுகின்றன.
பூத்துக் குலுங்கும்
போதுதான்
பருவப் பெண்ணுக்குப்
பாடம் புரிகின்றது
போலும்
உதிர்ந்த மலருக்கு
உறவு கொண்டாடும்
நாங்கள்
உன் கீதக் கம்பிகளை
மீட்டும் நாயனர்கள்.
யானை,
இருந்தாலும் ஆயிரம்
பொன்
இறந்தாலும் ஆயிரம்
பொன்
நீயும்,
இருந்தாலும் ஆயிரம்
பொன்
இறந்தாலும் ஆயிரம்
பொன்
மரமே உனக்கு உல்லாசம்
ஆனால்,
எங்கள் மனதில்
Comments
Post a Comment