நானல்ல
படுத்து
சிலரை நினைக்கின்றேன்.
சிரிப்பு
தானே வருகின்றது.
அதையே சிந்திக்கின்றேன்
அழுகை
தானே வருகின்றது.
எழுகின்றேன்
போதிக்கின்றேன்
அவர்களோ
தங்கள் பாதையை
மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
அதனால்
சிரிக்கின்றேன்.
அவர்கள் அழியப் போகிறார்கள்.
அதற்குக் காரணம்
நானல்ல
Comments
Post a Comment