மாற்ற முடியாது
எதிர்பார்ப்புகள்
சில சமயம்
கைவிரிக்கும்
போது
எதிராளிக்குக்
கொண்டாட்டங்கள்
ஆயிரம்.
எச்சரிக்கைகள்
சில சமயம்
திரும்பும்போது
எதிர்பாராத
விபத்துக்கள்
நேரிடுகின்றன.
எதிரொலிகள்
சில சமயம்
எதிரொலிக்காத
போது
நியாயங்கள்
மாற்றப்படுகின்றன.
தீர்ப்புகள்
சில சமயம்
மாற்றப்படும்போது
குற்றங்கள்
அங்கீகரிக்கப்படுகின்றன.
வியாதிகள்
முற்றும் போதுதான்
குணப்படுத்தவே
முயலுகின்றார்.
அதுபோலத்தான்,
குற்றங்கள்
அனுமதிக்கப்படும்போது
சோதனைகள்
அதிகமாகின்றன.
தீர்ப்புகளை
மாற்றியமைக்கலாம்
தீர்வுகளை – என்றுமே
Comments
Post a Comment