இந்நாட்டுப் பிரதிநிதிகள்
நாங்கள்தான்
இந்நாட்டுப் பிரதிநிதிகள்.
எனக்கென்று
சொந்தமாய் இருப்பதோ
ஒரு வேட்டி.
அவள்
என் மனைவிக்கென்று
சொந்தமாய் இருப்பதும்
ஒரு சேலை.
நாங்கள்
தினமும் வீடு கட்டுகின்றோம்.
வீட்டிற்கு
எனது வேட்டி சுவரெழுப்பும்.
அவளது சேலை
கூரையமைக்கும்.
இந்த எங்கள் வீட்டில்
நுழைவு வாயில்
சன்னல்
நிலா முற்றம்
அத்தனையும் உண்டு.
இரவில் நாங்கள்
பௌர்ணமிதான்
விடிந்தால்
எங்கள் வீடு பறிபோகும்.
நாங்கள்தான்
Comments
Post a Comment