காதலி
நாணத்தின் வான்மகளாம்
நானிலத்தில் தலைமகளாம்
என் மனதில் உயர்ந்தவளாம்
உளம் கவர்ந்த
காதலியாம்.
மின்மினியின்
மறுகண்ணாம்
மின்விளக்கின்
தொடரினளாம்
என்னிதயம் கொண்டவளாம்
என்னில் தோன்றிய
காதலியாம்.
சொர்க்கத்தின்
கதவுகளாம்
உன்விழியின் திறவுகள்
– என்
நெஞ்சைத் திறந்தவளே
நெஞ்ஞிறைந்த காதலியாம்.
பொழுது விழித்த
பொழுது
எழுந்து வந்தேன்
உனைக்காண
தூக்கம் ஏனோ பைங்கிளியே
துடிப்பில் நானிருக்கையிலே
விண்ணில் களித்திடும்
வெண்ணிலவு போல
கண்ணில்
தெரிகின்றாயே
நீ
மண்ணில் நடந்திடும்
மங்கா விளக்கே
மதிமயங்கி ஆடுவது
மாகண்ணில் தெரியலையோ?
பிறவிக்கு நீயென்றே
உறவுக்கு உனை
நினைத்தேன் – இன்று
அலருக்கு ஆளானேன்
புலமைக்கு நீ
பொருளானாய்.
Comments
Post a Comment