எதற்கு இந்தப் பாதி

 


வரவை விரும்பாத வீட்டிற்கு

வாடிக்கை எதற்கு என்றே

நாடித் துடிப்பை அடக்கியே

நாடாமல் நிற்கின்றேன் – நான்

நாட ஒருவர் இல்லையென்றே

நாடிச் சென்றேன் – இவன்

நாதி அற்றவன் என்பதாலே

பாதி வரவில் பாதி உறவு.

பாதி உறவில் நான்

பாவமாய் நின்றேன்

பாதிப்பது நானென்று

பாதையினை மாற்றினேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா