குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன.
போராட்டங்களைச் சந்தித்த இந்தப் பேனா பாராள வந்துவிட்டது. ஏடெழுதிய இந்தப் பேனா ஏருழுத வந்துவிட்டது. நீலத்தில் நீந்திக் கொண்டிருந்த இந்தப் பேனா சிவப்பில் மூழ்க வந்துவிட்டது. காகிதத்தில் ஊறிய இந்தப் பேனா சமுதாயச் சாக்கடையைச் சாட வந்துவிட்டது. இது பழைய பேனா. ஆனாலும் புதுமைப் பேனா.
Comments
Post a Comment