காதல் கடிதம்

 


காதல் கடிதம்

அன்புக்கு அன்பன் எழுதும்

அன்னக் கடிதம் – இதுஎன்

சின்னக் கடிதம் – எந்தன்

உண்மைக் கடிதம்.

 

அன்பே

உன்னைக் கண்ட நாள்முதல்

உரையாடத் துடிக்கின்றேன்

அன்றும் இன்றும் ஊமைதான்

உந்தன் காந்தவிழி முன்னே.

 

அன்று,

பேருந்தில் தான் கண்டேன்

பாவை, உன்முகத்தையா கண்டேன்

இல்லையில்லை உந்தன்

பார்வையினைக் கண்டேன்.

 

பாவையிலே மயங்கிய இந்த

பாவலன், பாவமாய் நிற்கின்றேன்.

எழும்பூரில் இறங்கிவிட்டாய்

ஏக்கத்துடன் இருந்துவிட்டேன்.

 

மீள் தன்மை இருந்திருந்தால்

மீண்டிருப்பேன். ஆனால்,

அத்தன்மையினை

மீன் கண்ணால்

நீ

எடுத்துச் சென்றாய்

அதனாலே,

மீளாத் தன்மையுடன் தவித்தேன்.

 

அன்று மாலை கண்டு

என் கண்ணே, மாண்டுவிட்டது.

மாண்டு விட்டதால் என்நிலை

மாற்றம் கொண்டது.

 

திரும்புநிலை பெற்றிடச் செய்திடுவாய்

என்னுள்ளக் குயிலே

பயிருக்கு உரமது போல

என் வாழ்விற்கு என்றாவாய்.

 

தினம்தினம் திருட்டு விழியால் பார்க்கின்றேன்

நித்தம் உந்தன் நினைவில் உழல்கின்றேன்

நீட்டிவிடாமல் தந்திடுவாயா உன்னுள்ளத்தை

நித்தம் வாடும் உன் நினைவிற்கு.


Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா