நான் தானே விளக்கம்
இருவிரலில் உனைவைத்து
எழுதுகின்றேன் – உன்
இருமாப்பு எனைவந்து
கொல்லுகின்றது.
கனவாலே உனைநினைத்து
வாடுகின்றேன் – நம்
மணவோலை அச்சிடவே
துடிக்கின்றேன்.
கனவினையே ஒழித்துக்கட்ட
நீயிருந்தாய் – அந்தக்
கனவினையே நினைவாக்க
விரும்புகின்றேன்
ஏகாந்தக் குயிலே
ஏனிந்த தயக்கம்
நாணத்தின் பொருளே
நான்தானே விளக்கம்.
Comments
Post a Comment