காதல் மொட்டு
ஆண் : ஏண்டி
பொண்ணு ஏங்குறே
எந்தன்
மனம் உம்மிலே
பெண் : ஏங்கும்
மனம் அறியுதே
ஏந்தான்
இந்த இடைவெளி
ஆண் : மகரந்தம்
என்னிடம் இருக்தே
மனம்
வரலே உன்னிடம் கொடுக்கவே
பெண் : வண்டு
வந்து மொய்க்கலே
மலராமல்
இருக்க முடியலே
ஆண் : மலர்ந்த
நாளிதுவோ
வண்டு வந்து மொய்க்கவோ
பெண் : தேனும்
இருக்கு மலரும் இருக்கு
வண்டு
தானே நுகரலே
ஆண் : வண்டு
நுகர்ந்து மொய்க்குதே
அதன்
மனது கேட்கிலே
பெண் : மொய்த்த
வண்டு நுகரலே
வண்டின்மனம்
எதனிடமோ?
ஆண் : உறவு
கொள்ள வந்ததே
உதறித்
தள்ளி விட்டதே
பெண் : நுகரும்
ஆசையிருந்தா
நுனியில் அமர்ந்திருப்பதோ?
Comments
Post a Comment