என் அவள்?

 


கண்ணுக்கு அழகானாள் காதல் என்ற

சொல்லுக்கு விருந்தானாள், கலை என்ற

சொல்லுக்குப் பொருளானாள் – அவள்

கல்வித் திருமகளின் பெயரானாள்.

 

கனவிலே அவள் வந்தால் – தன்

காதல் மறையாமல் அவள் தடுத்தாள்

கண்ணாடி முன்நின்றேன் – காதலாள்

முகம் கண்டேன், என்னை மறந்தேன்.

 

எப்போது பார்த்தேனோ அப்போதே

என்மனதில் இடம் கொடுத்தேன்

என்மனதில் அவள் உண்டு

அவள் மனதில் நானுன்டோ?

 

ஐயகோ, அவள் மனதில் நானிருந்தால்

இந்நேரம் தனித்திருப்பேனா? – நான்

இப்பிறவியில் அவளில்லாமல் இருப்பேனோ?

அவளைநான் எப்போது காதல் செய்வேனே?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா