உயர்த்திவிட்டாயோ?

 

இன்று என்நிலா

வானில் வந்தது

இரவு வேளையில்

முழித்துக் கொண்டது.

 

பட்டு மேனிபோல்

பட்டமானது – என்

நினைவலைதான்

கயிறு கோத்தது.

 

வறுமை எழுத்தைத்தான்

எழுதி வைத்தேனே

உயரப் பறந்துவே – நீ

உயர்ந்து விட்டாயோ?

 

தட்டு போலத்தான்

சுத்திப் போகிறே

கட்டு போலதான்

காத்து நிக்குறே.

 

கிட்ட வந்தாயோ

செத்துப் போயிடுவே

உயரப் பறந்தாயோ

உயிரோடிருப்பாயே.

 

கொடுமை நாட்டிலே

கொஞ்சுகின்றது

வறுமை வீட்டிலே

தொட்டிலாட்டுது

 

உறவு எங்கிலும்

பரந்து கிடக்குது.

உரிமை கேட்கும்போது

பிரிந்து போகுது.

 

உரிமை கேட்டுத்தான்

பிரிந்து போனாயோ?

வறுமை ஏட்டையும்

உயர்த்தி விட்டாயோ?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா