யாரைத் தேடுகிறாய்

 

பூவோடு சேர்ந்தாலன்றோ

நாறுக்கும் வாசம் வந்தது

என்னோடு நீ

சேர்ந்தாலன்றோ

வாழ்க்கைக்கு

இலக்கணமென்று

இருபாப்போடு இருந்திட்டேன்.

 

கருவிழிகள் இரண்டும்

கருவாக்கிக் கொண்டவளே

உன்னிதயத்தையும்

கருமையாக்கினாயோ

என்னை,

நடுத்தெருவில் விட்டுவிட…

 

மின்மினிப் பூச்சியாய்

மைவிழியாலே சைகை காட்டி

மாமரத்து நிழலில் நின்றவளே

நான் வரும் முன்னே

மாங்காய் தின்பதேன்.

 

தென்றலை

உறங்க வைக்கும்

தெய்வக் கோயிலுக்கு

வரச் சொல்லிவிட்டு

யாரைத் தேடுகின்றாய்

கடைத் தெருவிலே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா