ஒத்தையடிப் பாதையிலே…

 


ஒத்தையடிப் பாதையிலே

ஒய்யாரமாய்ப் போற பெண்ணே

ஓரடி எடுத்து வைச்சே

ஒடிஞ்சு போச்சு என்மனசு.

 

பாதையிலே முள் குத்தி

பாவமாய் நீ நின்றாய்

பாதையில் வந்த நான்

பாங்காய் உனைக் கண்டேன்.

 

அன்று வந்த காதல்தான்

அன்று தொட்ட மூச்சுதான்

அடங்கவில்லை இன்னும்

அடக்கவில்லை பின்னும்

தொட்டிடுவாய்

தென்பழக் கண்ணே.

 

உனக்கு,

நெளிவு சுளிவு எதுக்கடி

நேர்த்தியாய் வந்திடு

நேரத்தோடு காத்திருப்பேன்

காரத்தோடு நின்றிருப்பேன்

 

வளைந்து நெளிந்து

வருவதைக் காண

வாகை மாலையோடு – நான்

நின்றிருப்பேன்.

 

ஆடிவரும் வண்ண மயிலே

பாடி வரும் பண் குயிலே

 

மாலை வரும் வேளை

தென்றல் வந்து தீண்டியது.

மாலை வரும் நாளில்

தேனே நீ தீண்டுவாயோ?

 

கொடி அசையும் காற்றில்

கொத்து மல்லி தெரிந்தது – உன்

கொத்து மல்லி சிரிப்பிலே

முத்துப்பல் தெரிந்தது.

 

இடுப்பில் பல

அசைவு கண்டு

இமைக்காமல் இருந்துவிட்டேன்

இளிக்கவும் செய்து விட்டேன்.

 

கருமேகம் தன்மேல் கொண்ட

காதலியே – நீயென்

கருத்தில் வந்த

கன்னியே, கண்மணியே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா