கவிபாடும் உள்ளம்

 

பல பட்டங்கள்

வாங்கிடும் போது

வட்டங்கள்

வட்டமிடுகின்றன.

 

சட்டங்கள்

திருத்தப்படும் போது

சத்தங்கள்

எதிரொலிக்கின்றன.

 

சத்தங்கள்

நித்திரையாகும் போது

நிம்மதி

சலங்கையாடும்.

 

உண்மைகள்

தண்டிக்கப்படும்போது

குற்றங்கள்

அதிகரிக்கின்றன.

 

துயரங்கள்

குறையும்போது

உயரங்கள்

தலைதூக்குகின்றன.

 

திருடுகள்

அதிகரிக்கும்போது

சோம்பேறிகள்

உற்பத்தியாகின்றனர்.

 

இராகங்கள்

சந்திக்கும் போது

மேகங்கள்

மயங்குகின்றன.

 

மேகங்கள்

கைகுலுக்கும்போது

தாகங்கள்

தீர்க்கப்படுகின்றன.

 

வயல்கள்

செழிக்கும்போது

வயிறுகள்

வாழ்கின்றன.

 

குயில்கள்

கூவும்போது

தென்றலும்

கை தட்டுகின்றன.

 

உற்பத்தி

அதிகரிக்கும்போது

ஊதியம்

உயர்கின்றது.

 

வியாதிகள்

பெருகும்போது

நலன்கள்

விடைபெறுகின்றன.

 

தென்றலை

அனுபவிக்கும்போது

தேன்தமிழ்

ஊற்றெடுக்கின்றன.

 

அலைகடல்

மோதும்போது

உணர்ச்சிகள்

பரிணமிக்கின்றன.

 

கண்கள்

சந்திக்கும்போது

காதல் மொழிகள்

சிறகடிக்கின்றன.

 

தமிழ்ப்பால்

குடிக்கும்போது

தமிழ் - மனம்

வீசுகின்றது.

 

நாடிகள்

சந்திக்கும்போது

நாமொருவர்

என்றாகின்றோம்.

 

தோழமை

வலுப்பதனால்

தோள்கள்

உர மூட்டப்படுகின்றன.

 

ஆனால்,

 

கவி எழுதும்

ஒருவனுக்குக்

கால் வலி

தீர்ந்தபாடில்லை.

 

கால் வயிறு

நிறைவதற்கே

வழியில்லை

நாட்டினிலே.

 

கவி பாடும் உள்ளம்

காவியமே எழுதும்

பாவிகளைச்

சிருஷ்டிக்காது.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா