உழவன்
நீல வண்ணச் சேலை
உடுத்தி
பால் வண்ணப் பொட்டிட்டு
– அவனின்
கதிரான ஒளி கொண்டே
மேல் வானம் இருக்குது.
கரு வண்ண நிறத்தில்
கப்பலைச் செலுத்தியே
கருத்தோடு நிற்குது
– எந்தன்
காலின் அருகே.
பச்சை வண்ண மேனியில்
பச்சிளம் பயிர்கள்
பாவிகளின் உடலுக்குப்
பசியைப் போக்குதே.
விடியற்காலை நேரத்தில்
விடியலைக் காட்டவே
விழிப்போடு நிற்குது
– அது
கோழியெனும் பெயராலே.
நாட்டின் ஈரம்
மாட்டைக் கொண்டே
வாட்டமாய்ப் பயிர்
செய்வோன்
உழவன் என்பவனே.
போட்ட விதை
சேர்ந்தே வர
பகலிரவாய்ப் பாடுபட்டு
பகலிலே கனவும்
காண்பான்.
அவன்,
கொத்தடிமை என்பதாலே
கொத்தான பயிருக்குச்
சொந்தமில்லை
– அதில் வந்த
சொத்தைக்கே சொந்தமாவான்.
Comments
Post a Comment