சரியென்றால்
சன்னல் கதவை மூடும்
பொழுதுஉன்
சின்ன விழியும்
மூடுவ துண்டோ?
எண்ண விளக்கை
ஏற்றி விட்டு
என்னைத் தனியே
விட்டு விட்டாயே.
ஆடி மாதக் காற்றினைப்
போலுன்
ஆசை மனமும் போன
துவோ?
தேடிப் போட்ட
விதைக ளினுள்ளும்
சொத்தை யொன்று
இருந்திடுமோ?
காலம் என்றும்
மாறி வரலாம் – நம்
காதல் நினைவு
மாறி விடுமோ?
சாதல் ஒன்றே நம்பிணைப்பு
என்றால்
அதுவும் சரியே
என்றிடுவேன்.
காரணம் இன்றி
நாம் சாதல்
நிகழ்த்திட வேண்டாம்
என்றிட்டு
புதியதோர் புரட்சி
தன்னை இன்றே
Comments
Post a Comment