அங்கே தான் தெரியும்…


பெண்ணின் உள்ளத்தைக் கண்டது யார்?

கடலின் ஆழத்திற் சென்றது யார்?

மனதை அளந்தவன் யார்?

மணலில், வெறுத்து நடந்தவனே.

அவன்,

எண்ணத்தின் நிழலில் நின்று

நிழலில் குடிசை அமைத்து

மேகத்தினைக் கூரையாக்கி

வானுயர்ந்த கட்டிடங்களின் ஓரம்

பட்டா இல்லாமல்

பாழ்பட்டாலும் உதவி இல்லாமல்

கேட்பதற்கும் துணிவு இல்லாமல்

வாழும் குடிசைக்காரன்.

அவன்,

வேய்ந்த குடிசைக்குள்ளே

நிலவுமுகம் எட்டிப் பார்க்கின்றது

நிலவின் ஜொலிப்பு எல்லாம்

கருத்த முகத்தின் முன்னேதான்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா