நான் யார்?

 


பட்டங்கள் இங்கே

பறக்கின்றன – பாரில்

சட்டங்கள் அங்கே

எரிக்கப்படுகின்றன.

 

பட்டினிகள் இங்கே

கூடுகின்றன – பட்டு

மெத்தைகள் அங்கே

சேர்க்கப்படுகின்றன.

 

பாவைகள் இங்கே

பாவைதான் – பார்வை

பட்டால் அங்கே

சேவை தான்.

 

வேலைகள் இங்கே

கொஞ்சம்தான் – வால்களின்

கெஞ்சல்கள் அங்கே

தஞ்சம் தான்.

 

ஜோடிப்புறா இங்கே

சேர்ந்தது தான் – தனியான

ஜோடிக்கு அங்கே

சோதனை தான்.

 

சோதனைகள் இங்கே

மிச்சம் தான் – அவன்

சோம்பலுக்கு அங்கே

சம்பளம் தான்.

 

உழவன் இங்கே

உழுகின்றான் – அதிலே

ஊர்பவன் அங்கே

மிதக்கின்றான்.

 

நெசவாளி இங்கே

வசவாளி தான் – பசையாளி

ஒருவன் அங்கே

வகையாளி தான்.

 

இத்தனையும் பெற்றெடுத்த

இந்தியத் தாயைத் தான்

இருந்து இங்கே கேட்கின்றேன்

இந்த பூமி மைந்தனா நான்?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா