இன்ப வாழ்வு

 

மனதோடு, மாங்கல்யம் வேண்டும் என்றாய்

இன்று, மனம்மாறி போனதின் காரணம் என்ன?

மதமொரு தடைக்கல் என்றால், மனமே

மதம் பிடித்தால் விலகாததும் உண்டோ?

 

விடையேறி நான் வருவேன் என்றால்

வீண் வம்பு வேண்டாம் என்கிறாய்

இடையாடி நீவந்தாய் என்றால் நான்

படியேறி வருவேனோ கண்ணே.

 

நாடு கடத்தல் நாட்டில் தானென்றால் நீ

உன் வீட்டையும் நாட்டாக்கிவிடு

காட்டிலும் வாழ்வதற்கு இடமுண்டு

கானத்தில் நம் சோதரர்கள் பலருண்டு.

 

பாவிகளின் மத்தியிலே  வாழ்வதை விட

பாவமறியா பறவைகள் கூட்டமொடு

ஒட்டுக் குடித்தனம் நடத்திடலாம்

ஓசை இல்லாமல் வாழ்ந்திடலாம்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா