தமிழ் வாசம்

 


        கருநிற வேளையில்

        ஒளியைத் தந்து

        நிலவு நின்றிருக்கும்

        அதற்கு,

        மேகமது முத்தமிட

        முகிலோடு நின்றிருந்த வேளை

        குறுக்கிட்டது – அது

        மின்னல் என்னும்

        இன்னல் பண்ணும்

        தன்னலக் கொடி.

          அதுபோல,

          நிலவு முகமாம்

          இந்தினின் புதல்வியாம் – நீ

          நட்சத்திரம் போல

          நான் கண்டபோதே மின்னினாய்.

 

          அப்பொழுதே

          துடித்தேன் நான்

          உனக்கு முத்தமிட.

          ஆனால், அது முடியவில்லை

          ஏன்? நான் ஒரு

          தமிழன் என்பதால்

          தடுத்து நிறுத்தியது.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா