மை விழியாளே…


நீ வாய்திறந்து பேசினாலும்

கற்பு போய்விடும் என்று

கற்பனையில் மூழ்கிக் கிடக்கின்றாயோ?

 

தன்னுடைய கண் அசைவிலிருந்துதான்

இரவும் பகலும் தோன்றுகின்றதென்று

இருமாந்து இருக்கின்றாயோ?

 

உன்னுடைய கூந்தலைக் கண்டுதான்

அந்தக் கார்முகிலும்

பிண்ணிக் கொள்ள கற்றுக் கொண்டனவோ?

 

நாட்டினிலே முத்துக்களைப்

பார்ப்பதற்கே முடியலே

நீ சிரிக்க மறந்ததாலே

 

காவிரிக் கரையில்

அனல்காற்று வீசுவதேன்

உன் விழிகளில் அனல்பொறி பறக்கின்றதோ?

 

அழகு நிலவே,

உன்னை நம்பித்தான்

நிலவும் மாதமொரு முறை

விடுப்பு எடுத்துக்கொள்கிறது.

 

அந்த வானம் எப்பொழுதாவது

இரக்கம் கொண்டு மழைபெய்வது

உன்னழகை காண்பதற்குத் தானோ?

 

உன் மைவிழி ஓரங்களில்

நீர் சொட்டும் போதுதான்

எங்கள் மனதில் புரட்சியே தோன்றுகிறது.

 

தொட்டிலில் போட்ட நாள் முதல்

தொல்காப்பியம் கற்பதில்லை

தொல்லைகளைத்தான் கற்றுக் கொள்கிறோம்.

 

பெண்ணே, உன்கைத் தொட்டிலில்

தாளாட்டும் என்னை, தாளாட்டுப் பாடி

துகில் எழுப்புகின்றாயோ?

 

மாங்கனிகள் இனிப்பை மறந்ததேன்

உன் கண்ணங்களுக்கு

இனிப்பை வழங்கிவிட்டதோ?

 

அதனால்தான்,

மொய்க்கும் ஈக்களெல்லாம்

உன்பாதம் செல்லும் பாதைக்கு

வட்டமிட்டு முத்தமிடத் துடிக்கின்றதோ?

 

அந்தக் கற்புக்கரசி

கண்ணகியின் சிலைக்கு

வடிவம் கொடுக்கின்றதோ

உன், கார்வண்ணக் கூந்தல்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா