வறட்சி வாழ்க்கை


நிலவேறும் வானின்மேலே

ரதியென்னும் பெண்ணைக் கண்டேன்

ரதியென்னும் பெண்ணின் மேலே

கதியின்னு மயங்கி நின்றேன்.

 

அத்திக்காய் பழுக்கக் கண்டேன்

அந்தவனம் திறக்கக் கண்டேன்

அந்தரத்தில் ஆடும் என்னை

அருகினிலே அழைக்கக் கண்டேன்.

 

மேகமதை பாதை யாக்கி

நட்சத்திரத்தை விளக்காய் ஏற்றி

விண்ணிலே வீடு கட்டி

நிலவோடு வாழ்ந்து வந்தேன்.

 

உறவுக்கு நீரை வார்த்து

ஏட்டிலே வரவு வைத்தேன்.

வரவு வைத்த ஏடோ – இன்று

வரப்பிலே நனைய நின்றேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா