கானல் நீர்

காதல் சமுதாயத்தில்

சாகசம் செய்திடவே

சதுராட்டம் ஆடினேன் – இன்று

சதி செய்துவிட்டாள்.

 

அன்று,

தாவணியை இழுத்துக்கட்டி

தங்க மேனியைப்

பளிங்குக் கல்லாக்கி என்னை

பரவசம் அடையச் செய்தாள்.

 

பாவ(ல்)லவர்கள்

பாவையவள் எழிலை

எழுத முடியாமல்

ஏங்கி நின்ற சமயம்

 

என் எழுத்தாணி

தமிழ் மையால்

நெஞ்சம் உருகும்

அவள் மேனிக்கோ

புத்தாடை அணிவித்தேன்.

 

புத்தாடை மயக்கத்தாலே

அத்தான் என்றிட்டாள்.

அப்போது வந்ததோ

ஆனந்தக் கண்ணீர்.

 

இன்றோ, எனக்கு

புது வாழ்வு வந்தது

இனிப்புடன் சென்றேன்

அதிர்ச்சியாய் நின்றேன்.

ஆம்,

வாழ்க்கைக்குத் துணையாக்கி

வசந்தத்திற்கு இணையாக்கி

வம்சத்திற்குக் கொடியாக்கி

துன்பத்தை அவள் போக்கி

இன்பத்தை எனக்களிப்பாள்

என்று,

இருமாந்து இருந்துவிட்டேன்.

 

எங்கள் வாழ்க்கைக்குக்

கெஞ்சல்களே அதிகமானதால்

கொஞ்சும் கிளியின்று

வாய்க்கரிசி கேட்டிட்டாள்.

 

கானல் நீரைக்

கண்ணீர்ப் பூக்களாக்கி

அவள் மேனியோடு நானும்

ஐக்கியமாகி விடுகின்றேன்.

 

கானல் நீர் கங்கையாகி

என்னுடலினைக் கடலாக்கியதால்

கருப்பா, என்றிட்டனர்.

 

என் இதயமே

இருண்டுவிட்டதால்

இம்சைப் பற்றிக் கவலையில்லை

கானல் நீருக்கோ எல்லையில்லை.

 

கண்ணீர்ப் பூக்களின்

எண்ணங்களுக்குக்

கானல் நீரே

முற்றுப்புள்ளி வைக்கும்

 

கண்ணகியின்

கானல் நீரோ

மதுரையை அழித்தது.

 

என்னுடைய கானல் நீரோ

இதயத்தையே அழிக்கின்றது.

         

வாழ்க்கையே சூன்யமாகி

பாலைவனம் சென்றேன்.

நான்விட்ட கண்ணீரால்தான்

பாலைவனமும் கங்கையானது.

 

திரைப்படத்தையே

சிறை கொண்ட இதயங்களுக்கு

இலக்கியம் பற்றித் தெரியாது.

இன்று பற்றி எரிகின்றது

நம்மில் பற்று அற்றுப்போனதால்.

 

வள்ளுவன் இளங்கோ பாரதி

பாரதத்தில் இருந்திருந்தால்

பாயும் கானல் நீரால்

முதலில் பலியாவது – இந்தத்

திரைப்படக்காரர்கள் தான்.

 

தொலைக்காட்சி

நாட்டில் பெருகிவிட்டதால்

வானொலிப் பெட்டியின்று

கானல் நீரில் மிதக்கின்றது.

 

காதல் என்னும்

சமுதாயக் கோட்டைக்குள்

முதலைகளே வளர்க்கப்படுகின்றன.

 

உல்லாசக் காற்று கூட

என்னுடைய கானல் நீரால்

உருத்தெரியாமல் போகின்றது.

 

கருகி வந்த கருமேகங்கள்

என் கானல் நீரைக் கண்டு

இடம் தெரியாமல் ஓடி மறைந்தன.

 

பாடப் புத்தகங்களைப்

படித்ததைவிட

பாவையவள் பார்வையையே

நோக்கி நின்றேன்.

 

அங்குக்,

கானல் நீர் வடிவதைக் கண்டு

என்மனம் குறுகி

இதயம் சுருங்கி

அவளின் கானல் நீருக்குத்

தொட்டியானது

என் இதயப் பை.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா