தீபாவளி வாழ்த்து
கரை காணாமல் தவித்த என்
வாழ்வென்ற கப்பலுக்குக்
கரையினை விளக்க
வந்த
கலங்கரை விளக்கு நீங்கள்
தித்திக்கும்
இன்பத்
தீபாவளித் திருநாளில்
கடமையில் கோடிகண்டு
காலங்கள் போற்ற வாழ்க.
❤
வானை வீணாக்கி
கண்ணைநீ நிலவாக்கி
மண்ணை வீணாக்கிப்
பொன்னைநீ மலையாக்கி
கல்லை வீணாக்கி
கலைச்சிற்பம் போலாக்கிச்
சொல்லை மடலாக்கி
சொன்னேன் வாழ்த்துப்பல.
செவ்வானம் கிழக்குதிக்கும்
செங்கதிரும் நிமிர்ந்து நிற்கும்
பூஞ்சோலை பூத்திருக்கும்
மொய்க்கும் வண்டுகள் தானிருக்கும்
உன்பெயர் ஓங்கிநிற்க
உண்மையோடு வாழ்ந்திடுவாய்
அமுதுண்ட சிவப்பு
ரோசாவை
அனுப்புகின்றேன் தீபாவளி வாழ்த்தாக.
💜
உண்மை மறைத்தாலும்
நிலைப்ப தில்லை
தங்கம் தேய்த்தாலும்
மங்குவ தில்லை
புகழ் மறுத்தாலும்
மறைவ தில்லை.
கல்லைக் குடைந்து
கோயி லாக்கலாம்
மண்ணைப் பிளந்து
கிணறு வெட்டலாம்
கசப்பில் வாழும்
சிலருக் கெல்லாம்
இனிப்பாய், வெள்ளை
ரோசாவாய் வாழ
வாழ்த்துகிறேன்
தீபாவளி நாளிலே.
Comments
Post a Comment