களையா நெஞ்சு

 

ஏழையிளம் நெஞ்சுக்குள்ளே

ஈரமில்லா என்றெண்ணிக் கொண்டு

பாதி வழியில் போகின்றாயா?

இல்லை, பாதையை மாற்றிக் கொண்டாயா?

 

பட்டுமெத்தை சுகம் கேட்டேனா

அளவுக்கு மீறி நடந்தேனா?

உன்னுள்ளத்தைத் தானே கேட்டேன்

வேறொன்றும் யான் கேட்கிலேனே

 

என் உல்லாச வாழ்க்கையைத் துறந்தேன்

சிலர் நட்பையும் இழந்தேன்

பலரின் வெறுப்புக்கும் ஆளானேன்

ஏன், உன்னை விரும்பிய குற்றத்திற்காக.

 

நான் வகுப்புகளைத் துறக்கின்றேன்

என் வகுப்பையும் மறக்கின்றேன்

தினம் தினம் குழந்தையாகின்றேன்

ஏன், உன்னன்பு மழையில் நனைவதற்கு.

 

கடற்கரையில் விளக்கேற்றிவிட்டு

வீட்டிற்குக் கொண்டு போகாமல்

வீதியிலே விட்டுவிடுவேன் என்று

மறுப்புமொழி அளிக்கின்றாயோ?

 

என் சிந்தனையை இழந்தேன் – நீ

சிரித்து வந்த வேளையில்

என் சொந்தங்களை இழக்கத் துணிந்தேன் – நீ

சொந்தமாவாய் என்று.

அலருக்குத் துணிந்து விட்டேன் – நீ

வராமல் போய்விடுவாய் என்றால்.

 

நான் கல்லூரியில் எழுதியதைவிட

என்பேனா நுனியானது

உன் தொடர்பு ஏற்பட்டபின்

என் நெஞ்சைக் குத்துகிறது.

வேறொன்றை நினைப்பதற்கே

நினைத்து எழுதுவதற்கே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா