என் தவிப்பு

 கீதா நீயென் கீதாஞ்சலி

சங்கிதா என் கீதா அஞ்சலி – நீ

தேன்நிலவில் வருவது கண்டு

தேவன் இவன் காத்து நின்றேன்.

தேவதை என்பதால் தேன்நிலவுக்கு

விண்ணுலகை அமைத்திட்டேன்.

 

பால்நிலா ஒளியினிலே பாவையுன்னை

பாலகன் கண்டிட்டே பரிதவித்தேன் – என்

கண்கள் ஒளியிழக்கச் செய்திட்டாய்

கண்ணிருந்தும் குருடனாய் அலைகின்றேன்.

 

தேரில் வரும் உனைக்கண்டு

தேவனிவன் ஓடி வந்தேன் – என்

கால்கள் தளர்ச்சி பெற்றதால்

காலிருந்தும் நொண்டியானேன்.

 

உன்னைக் காணத்தான் தவித்தேன்

தவிப்பில் வந்தது கண்ணீர் – இன்றது

உப்பலமாக மாறிவிட்டதால்

உப்பிற்குப் பஞ்சமில்லை – என்

தவிப்பிற்கோ எல்லையில்லை.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா