பழமை

 

உதயன் ஒருநாள் மறைந்தால்

உதயமாவது மேற்கா? கிழக்கா?

 

காலம் ஒருநாள் மாறிப் போகும் – என்

கனவுகள் அன்றே உதயமாகும்.

 

சோலை விழியில் நானிருந்தேன் – அந்தச்

சோலைப் பூவோ வாடுவதேன்?

 

எனக்குத்,

 

தேசம் தெரிய அவளிருந்தாள் – இன்றோ

தேசமே யவளாய் ஆகிவிட்டாள்.

 

பாசம் பொழியும் கனிமொழியே – இன்று

பாகாய் யுருகி ஓடுகின்றாள்.

 

பருவம் அடைந்த பின்னாலும்

பழமை நினைத்து வாடுகின்றாள்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா