கஷ்டங்கள்
கல்யாணத்திற்கு முன்
பெண் அழுகின்றாள்.
அதற்குப் பின்
ஆண் அழுகின்றான்.
பிரசவத்திற்கு
முன்
பெண் அழுகின்றாள்
அதற்குப் பின்
ஆண் அழுகின்றான்.
இல்லறக் கஷ்டங்கள்
இருவருக்கும்
சமமென்பார் அதைப்
பகிர்ந்துக்கொள்ளும்
போதுதான்
கஷ்டங்கள் தங்கள்
இஷ்டம்போல்
மாறிமாறித் தோன்றுகிறது.
எவ்வளவு கஷ்டங்கள்
வந்தாலும்
அகத்திற்கு மட்டும்
நஷ்டமே வேண்டாம்.
கஷ்டங்களை அதன்
இஷ்டப்படி விட்டுவிட்டால்
நஷ்டங்களோ பல
கோடி.
உனக்கும்
எங்களோடு சேர்ந்து
இனவெறி பிடித்து
நாட்கள் பல ஆனதோ?
கஷ்டங்களே
தள்ளாடுவதால்
– நீ
எங்களையும் ஏன்
தள்ளாட வைக்கின்றாய்?
Comments
Post a Comment