விடுதி வாழ்க்கை

 

நமது விடுதி ஒரு

          பல்கலைக் கழகம்  - அந்தப்

          பல்பலைக் கழகத்தில்

                    தொங்கிக் கிடக்கின்ற

                    தொட்டில் பூக்கள் நாம்.

 

          அளவில்லா

          வானில் திரிந்த

          வண்ணக் கிளிகள்

நாம் இன்று

ஒரு கூண்டுக் கிளிகளானோம்.

 

          இந்த விடுதியைத்தானே

          நம், சதுரங்க விளையாட்டின்

          கட்டங்களாக்கிக் கொள்கின்றோம்.

 

          இந்த விடுதியில் இருந்துதான்

          இந்தியாவின் எதிர்காலத்தைச்

          சந்திக்கப் போகின்றோம்

அதைப்பற்றிச் சிந்தித்துக்

கொண்டிருக்கின்றோம்.

 

சிந்தனையின் நிழல்களைத்தான்

இங்கு நிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்

நிந்தியத்தின் நித்தியானந்தர்களுக்கு

அந்த நீல வானமும்

குடை பிடித்துக் கொண்டிருக்கிறது.

 

கார்மேகமும் நமைப்பார்த்து

          பயந்தோடுகின்றது

தென்றல் கூட நம்மைத் தீண்ட

          அச்சப்படுகின்றது.

 

ஏன்? அச்சமில்லாத

          பிச்சை வாழ்க்கை

          வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதிலும் மிச்சமில்லாமல்

          துடைத்துக் கொண்டிருக்கின்றோம்.

 

இந்த விடுதியில் இருந்துதான்

எத்தனை கனவுகள்

என்னென்ன நிகழ்வுகள்

நடக்கின்றன

செழிக்கின்றன

பழிக்கின்றன

படுகின்றன

விடுகின்றன

எண்ணிப் பாருங்கள்

தோழர்களே

எண்ணிப் பாருங்கள்.

 

இந்தப்

பல்கலைக்கழகத்தில்

சேர்ந்த பின் தான் – நாம்

பல பாடங்களைக் கற்கின்றோம்

கற்ற பாடங்களுக்குத்

தேர்வு எழுதாமல்

முடிவைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

 

கல்லூரியில் கற்பதோ

          ஒருசிறு பாகம்

கல்லெறியில் கற்பதே

          ஒருபெரும் பாகம்

பொறாமை பிடிப்பதே

          ஒரு துளி பாகம்

ஒருதுளி நஞ்சே

          உயிரைக் கொள்ளும்

உயிரின் சிறப்பே

          பொறுமையில் உண்டு

பொறுமையில் வாழ்ந்தான்

          உலகில் சிறப்பான்

காதல் வயத்தால்

          கல்வியை மறப்பான்

செல்வியைத் தேடி

          பேருந்தில் அலைவான்

வகுப்பறை நேரம்

          வகுப்பு வாதத்தால் ஆகும்.

 

படிக்கின்ற நேரம்

          பகற்கனவாய் மாறும்

வடிக்கின்ற கண்ணீர்

          கங்கையா றாகும்

முடித்துவிட்ட பின்னே

          அதன், வெளிப்பா டாகும்

பட்டம், முடித்துவிட்ட பின்னே

          அதன் வெளிப்பா டாகும்.

 

பல்கலைக்கழகம்,

 

தேர்வின் முடிவுகள்

பகடை விளையாட்டில்

நமக்குக் கிடைக்கும் தாயங்கள்.

 

பல்கலைக் கழகம்

 

பகடைக் காய்களைச் சரியாக

          வைத்துக் கொள்ளாததாலும்

சரியாக நம்மால் உருட்ட முடியாததாலும்

தாயங்களைப் பெறுவதற்குக்

கஷ்டப்படுகின்றோம் – நாம்

கஷ்டப்படுகின்றோம்.

 

பொறுமை,

 

நம்மிடையே

பூசல்கள் ஏற்படும்போது

பொறுமையைக் கையாள்பவன்

சிந்திக்கத் தெரிந்தவன்

இடர்ப்பாடுகளிலிருந்து

விடுதலையடைகின்றான்.

பொறுமையைக் கையாள்பவன்

பெருஞ்சாதனையைச் செய்கின்றான்.

 

பொறாமை

 

நாட்டில் எத்தனையோ

ஆமைகள் இருக்கின்றன.

அவையெல்லாம் ஏப்பமிட்டு

நம்மிடம் உலாவுகின்றன.

ஆம், பொறாமை

நம்மிடம் உலா வருகின்றது.

அது, நற்பண்புகளுக்கு

தடைவிதிக்கின்றன.

 

பாவங்கள்,

 

இந்த

விடுதியில் இருந்துக்கொண்டு

எத்தனை … எத்தனை

பாவங்கள் செய்கின்றோம்.

 

பாவங்களைக்

கழுவிக் கொள்ள

கங்கையாற்றுக்குச் சென்றிடுவோம்.        

 

பாவங்களைக்

கழுவிக் கழுவி – அந்தக்

கங்கையாறே – இன்று

பாவ ஆறாகிவிட்டது.

 

இனி, எங்குக் குளித்து

நம் பாவங்களைக்

கழுவின் கொள்ளப்போகின்றோம்?

 

நண்பர்களே

கவலை வேண்டாம்.

நமக்கென்று

இரு கங்கையாறு

உள்ளங்களிலிருந்து

எண்ணங்களிலிருந்து

நெஞ்சங்களிலிருந்து

கண்களின் வழியாக

எப்பொழுதும் ஓடுகின்றதே.

அதை, கவனித்தீர்களா?

நண்பர்களே

கவனித்தீர்களா?

 

இனி, பாவங்களைக்

          கழுவிக்கொள்ள

நாம் வடதேசம்

செல்ல வேண்டியதில்லை

          ஆம், நம் கண்ணீர் ஆற்றாலே

          நம் பாவங்களைக் குளிப்பாட்டி – நாமே

          கழுவிக் கொள்வோம்.

 

          காதல்,

 

          இதுதான்

          நம் வாழ்க்கையில்

ஏற்படும் பாதிப்பு

பாதிப்பிலும்

இது பெரும் அவமதிப்பு.

 

காதல்

அது புனிதமானது

வெண்ணாடை பூண்டது.

அது,  போர்வைக்குள்ளேயே

தனது உலகமென்று

வாழ்ந்து கொண்டிருக்கும்

மூட்டைப் பூச்சியல்ல

நண்பர்களே

மூட்டைப் பூச்சியல்ல

மின்மினிப் பூச்சி.

 

காமத்தின் பரிசமல்ல காதல்

காவியத்தின் மூலம் அது.

ஷாஜகான்

தன் காதலிக்காக

தாஜ்மகாலையே எழுப்பினான்

உங்களைப்

பார்த்துத்தான் கேட்கின்றேன்

நீங்கள் காதலித்திருந்தால்

காதலித்துக் கொண்டிருந்தால்

காதலித்தால்

உங்களால்

உங்களின் காதலிக்காக

ஒரே ஒரு நிமிடமாவது

ஒதுக்குவீர்களா?

அவளை, நினைத்தாவது பார்ப்பீர்களா?

அது, உங்களால் முடியாது

ஏன்? உங்களால் முடியாது

நீங்கள், காலச் சூழலில் சிக்கிக்கொண்ட

காலவோட்டத்தின் படகுகள்.

 

வேண்டுகோள்,

 

பெண்களை நம்பாதே நண்பர்களே

பெண்களை நம்பாதே

          கண்களைக் காட்டி

                    கண்களைக் கவரும்                 (பெண்களை...)

          அழகைக் காட்டி

                    ஆளை உருக்கும்                      (பெண்களை…)

          உளம்பெற்று

                    இரும்பாய் இருக்கும்                (பெண்களை…)

          நம்பி மோசம்

                    செய்கின்ற                                (பெண்களை…)

          உறவு சொல்லி

                    உயிரை வாங்கும்                     (பெண்களை…)

          படித்தும் பட்டும்

                    சொல்லுகின்றேன்                   (பெண்களை…)

 

          நாம், இந்த

          ஆண்டு விடுதிக் கட்டுரையில்

          முன்னுரையாக வந்தோம்

          உள்ளுரையில்

அணிந்துரையாக

          பல்கலைக் கழகமானோம்

          பின்னுரையை

                    எழுதிக்கொண்டிருக்கும் நாம்

          வரும் தேர்வினை

                    நினைக்க வேண்டும்

          முடிவை நலமாக்க

                    வேண்டும்

          விடுதி வாழ்வை மறவாமல்

                    இருக்க வேண்டும்

 

          எத்தனை கண்டேன்

          என்னென்ன அறிந்தேன்

          அத்தனையும் எழுத

          இத்துணைவன் இயல

          என் எழுதுகோல் மட்டும் – இன்று

          வேலை நிறுத்தம் செய்ததால்

          இத்தோடு முடிக்கின்றேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா