நேசக்காரர்கள்
எங்களின் கடிதங்களை
காதலி படித்ததைவிட
குப்பைத் தொட்டிகள் தான் படிக்கின்றன.
எங்களின் எண்ணங்களை
அவள் அறிந்ததைவிட
தென்றலுக்குத்தான் தெரியும்.
எங்களின் ஓசைகள்
அவளுக்கு எட்டியதைவிட
சோலைக்குள்தான் மோதுகின்றன.
எங்களின் ஆசைகளை
வானவெளியில் பறக்கவிட்டு
வானொலியில் கேட்கும்
நேயர் விருப்பக்காரர்கள்.
எங்களின் நெஞ்சங்களை
அடமானம் வைத்துவிட்டதால்
மானம் காக்கத் தெரியாமல்
துருப்பிடித்த படகாக
உதிர்ந்து போகும் துருவல்கள்.
எங்களின் நெஞ்சுக்குள்ளே
நெஞ்சைத் தேடிக் கொண்டிருக்கும்
நயவஞ்சக்காரர்கள்
எங்கள் நெஞ்சங்களுக்குள்ளே
போட்டி போட்டு
மோதிக்கொள்ளும்
மோசக்காரர்கள்.
நாங்கள் ஏமாற்றங்களுக்கு
Comments
Post a Comment