மெல்ல வந்த தென்றல்
நாணத்தால் தலைகுனியும் பெண்கள்
நாய்கள் குறைக்கும்போது
நாண்கள் எய்தத்
துணிந்து விடுகிறார்கள்.
அழகு நீ என்று
கூறிவிட்டால்
போதும்
அழகு நிலவே மறைந்து
போகும்.
மெல்ல வந்தத்
தென்றல்
என்னை வருடி விட்டுச்
சென்றது
வானத்து முழு
நிலவிற்கு
அமாவாசை மட்டும்தான்
விடுமுறை நாட்களாம்.
ஆனால்,
இந்தக் காதல்
வனத்து
முழு நிலவிற்கு
முப்பது நாளும்
விடுமுறையோ?
நிலவைக் காணாத
குழந்தைகள்
அன்னம் உண்ண
அடம்பிடிக்கின்றன.
ஆம்,
தம் பிடிக்கின்றன.
அந்த மேகக் கூட்டங்களின்
கோபுர வாசல்கள்
மூடியே இருக்கின்றனவோ?
கோவிந்தன் பெயரைச்
சொல்லி
கோயில் புறாவைத்
தூது அனுப்பி
இருக்கின்றேன்.
மெல்ல வந்தத்
தென்றல்
என்னை வருடி விட்டுச்
சென்றது.
என் எண்ணங்களின்
சிறைகொண்டவளே
பொன் பாலீஸ் என்பதால்
– என் இதயத்தைப்
பாலீஸ் பண்ணிவிட்டாயோ?
கன்னிகளின் மாடப்புறா
எங்கள் காலடியிலிருந்த
காலம்
மலையேறிப் போய்விட்டதால்
விலையேறிப் போய்விட்டாயோ?
பக்தியின் மார்க்கத்திற்கு
மார்கழியைத் தேடும்
நாங்கள்
மலையாய் வரவேற்கத்
துடிப்பது
உங்கள் காதல்
கடிதங்களைத்தான்.
அழகான மலரைக்
கண்டே
அள்ளத் துடிக்கும்
எங்களுக்கு
ஒத்துழையாமை இயக்கமேன்?
அந்த ஏழு நாட்களில்
வந்த என் கனவுகள்
நிராதரவாக்கப்பட்டனவோ?
மெல்ல வந்தத்
தென்றல்
என்னை வருடி விட்டுச்
சென்றது.
முள்ளில்லா ரோஜாவிற்கு
முகமூடி வேடம்
– முக்கியம்
தேவைப்படுகின்றதோ?
பார்த்தே கற்பழிக்கும்
காளையர்களைப்
பாவையாலே எரித்துவிட்டு
நாவை அடக்கிவிடுவாயோ?
ரோசா இதழ்களுக்கு
ரோசம் வரும்போதுதான் – நாங்கள்
நாசமாகின்றோம்?
கீறல்பட்ட இதயங்களைக்
கழுவுவதற்குக்
கீர்த்தி கொண்ட
உன்மது அணையை
திறந்துவிடக்
கூடாதா?
அந்த, விழிக்
கன்னத்தில்
வழிந்தோடும் அழகினை
– எங்களுக்கு
மொழிந்து கொடுப்பாயா?
எங்களின் கனவுக்
களஞ்சியங்கள்
இன்னும்,
பிரிக்கப்படாமலேயே
இருக்கின்றன.
என்னுடைய இதய
வாசல்
இன்னும்
கோலமிடாமல் தான்
இருக்கின்றன.
எங்களின் ஆசைப்
பூக்களுக்கு
வயதொன்றும் ஆகிவிடவில்லை.
வேகக் கட்டுப்பாட்டுத்
தடைக்கு
நாங்கள் தடைவிதிக்கின்றோம்
சாகத் துணிந்துவிட்டோம்
ஆம்,
அதிலாவது சரித்திரம்
படைக்கலாமே?
மெல்ல வந்தத்
தென்றல்
Comments
Post a Comment