எனக்குக் கிடைத்தாள்
நாளையென் துணைவி
இன்றென் காதலி
நாடியின் துடிப்பவள்
– என்
இல்லத்திற்கு அரசியவள்
நாதத்திற்கு ஓசையவள்
நானிலத்தின் முதல்மகள்
மாநிலத்தின் தலைமகள்
தமிழ்காக்கும் உயர்மகள்.
நான்போற்றும்
கலைமகள்
என்னிலுயர்ந்த காதலி
நான்பார்க்கும்
பெண்ணே
என்னுள்ளத்தில் குடிகொண்டாள்
என்னிதயக் கோயிலிலே
தெய்வமாய் வைத்தேன்
என்றைக்கும் இதயத்தில்
யான்கண்ட வைரமே.
Comments
Post a Comment