உதையுங்கள் திறக்கப்படும்

 

காலம்

மாறவில்லை என்றால்

எங்கள்

மூச்சுக் காற்றும்

தோட்டாக்களை உருக்கும்.

 

காரிகையின் கைகளில்

மலர்ச்சரம் நீங்கி

துப்பாக்கி இரவைகள்

தொடுக்கும் காலம்

வந்துவிட்டது.

 

ஈழத்தின் கற்பென்ன

சிங்களனுக்குக் கற்கண்டா?

 

ஈழத்து மண்ணுக்கும்

இதயம் இருப்பதால்தான்

அவ்வப்போது

பூமிக்குள்ளிருந்து

எரிமலைகள்

வெடிக்கின்றன.

 

ஈழத்துக் கண்ணகி

உடைத்துச் சிதறிய

சிலம்பு மணிகள்தான்

விடுதலைப் புலிகள்.

 

குங்குமத்தை இழந்தவர்கள்

குண்டுகளைச் சுடுகின்றார்கள்.

 

கண் கலங்கியவர்கள்

கண்ணியத்தோடு

நடக்கப் போகின்றார்கள்.

 

மண் வேண்டியவர்கள்

நிச்சயம்

பெறத்தான் போகின்றார்கள்.

அதனால்,

உடையுங்கள் கொடுக்கப்படும்

உதையுங்கள் திறக்கப்படும்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா