ஆசையின்…
அவள் :
கல்லு வளருதடா
சொல்லு மடியுதடா
கண்ணு விரியுதடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
கடலு சிரிக்குதடா
கப்பலு மடியுதடா
கண்ணங் குழியுதடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
வானம் குளிருதடா
மழையும் பெய்யுதடா
நெற்றி சுருங்குதடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
மின்னல் வந்ததடா
மேகம் கலைந்ததடா
பல்லு தெரியுதடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
தங்கம் விலை யேறுதடா
சொந்தம் நிலம் போனதடா
மோகக் களிப்பிலடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
தென்றல் அலைந்ததடா
வீதியுலா வந்ததடா
பூவிடை அசைந்ததடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
மழையும் வந்ததடா
குளிரும் வந்ததடா
நெஞ்சம் துடிக்குதடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
விழியோ மலர்ந்ததடா
நிலவோ மறைந்ததடா
கனவே நிலைக்குதடா – இந்தக்
கட்டழகன் முன்னே.
அவன் :
வாழ்க்கை இனிக்கலையோ
நாழிகை போகலையோ
கோழி கூவயிலே
குளித்திடு பெண்மயிலே.
பனிமேகக் கரையினிலே
குனிந்து நானிருப்பேன்
ஆதவன் வரும்முன்னே
ஆடடி பெண்மயிலே.
வெள்ளித் தங்கம் மணலிலே
பாய்போட்டு நானிருப்பேன்
நிலவு மறையும் பின்னே
நிலவாய் வந்துவிடு.
ஏக்கம் தீர்த்திடுவேன்
பாக்கம் சென்றிடுவேன்
சந்தையிலே மாடு வாங்கி
பால் கரந்து தந்திடுவேன்.
கரும்பைச் சுவைத்திடுவேன்
கற்கண்டாய் மாற்றிடுவேன்
வெறுப்பை மறந்திடுவேன்
பக்கத்தில் நீ இருந்தால்.
Comments
Post a Comment