புத்துணர்வு

 விண்ணில் கண்ட

தேவதை என்

நெஞ்சில் வந்து நின்றாள்.

 

அவளை நான்

பார்க்கும் போது

விண்ணில் ஒளியைக்

காணலே, அதனால்

அவள் பூ வெழிலைக்

கண்டேன்.

 

விண்ணை நான்

பார்க்கும் போது

ஒளியைக் காணலே.

அவள் என்னை

நோக்குகையிலே.

 

என் இதய இரத்தத்தை மையாக்கி

இனிய வெண்மனதைத் தாளாக்கி

என் நெஞ்சோடு எழுதினேன்

காதல் என்னும் ஏடுதனையே.

 

தூது அனுப்பிய தும்பிகைக்குக்

குறும்பு மனசு, அதனாலே

குறுக்கிட்டது, குறும்பாலே.

 

குத்திட்டது என் மனது

சொல்லிட்டது குறும்பாலே – அவள்

குறிப்பான செயலினையே.

 

தவிப்பானை தவிர்த்திட்டு

படிப்பானை நிறுத்திட்டு

எடுப்பானை எடுத்திட்டு

விரைந்தேன் நான்.

 

நாண்முகன் வரைந்த ஓவியம்

நானிலத்தில் புகழ்பெற்ற – அவள்

என்னவள் என்றே

புகழாரம் செய்தே

புத்துணர்ச்சியோடு செல்கின்றேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா