இதோ காண்
என் நெஞ்சைத் தொட்ட
நாயகிக்கு நெஞ்சுவலி
என்பதால்
கொஞ்சம் நின்றேன்
உயிரில்லை உடலினிலே
உயிரில்லை என்பதாலே
உறவில்லை என்பதா?
என்மனதில்
நிலையில்லை, நிம்மதியில்லை
நித்திரையில்லை
உன் சித்திரம்
என்னுள்ளத்தில்
பத்திரமானதால்
நான் பித்தனானேன்
பித்து பிடித்த
சித்தனானேன்.
சொத்து விட்டு
சொந்தம் விட்டு
உன்னிடம் சொர்க்கம்
காண
பக்கம் வந்தேன்
பக்தனாக.
நீ பாதியிலே விட்டுச்
சென்றால்
பாங்காய் இருப்பேன்
என்று
நினைத்தாயோ? பாவியின்
உயிரும்
உன்னைத் தொடருது
காண்.
Comments
Post a Comment