காதல் தாகம்
பெண் : அரைச்ச மஞ்சா தீரவில்லே
ஒரச்ச அம்மி தேயவில்லே
அத்தை மகன் உன்மேலே
ஆசை இன்னும் தீரவில்லே
ஆண் : வச்ச பூ வாடவில்லே
வச்ச பொட்டு அழியவில்லே
தாலி கட்டி மச்சானுக்குத்
தாகம் இன்னும் தணியவில்லே
பெண் : கொட்டு மேளம் கொட்டித்தானே
கொண்டைக்காரியை நீ மணந்த
கொஞ்சுவதற்குத் தடையேனோ
கெண்டை விரலைத் தொடுவதற்கு
ஆண் : துட்டு நகை சீரோடு
துல்லி வந்த எம்மயிலே
கொல்லையாசை உன் மேலே
கொஞ்சத்தான் முடியவில்லே.
பெண் : குறிஞ்சி மலர் பூத்திருக்க
குற்றமென்ன மனசினிலே
ஆண் : சீர் கொண்டு வந்தவளே
சிலையாக நிற்பவளே
சினுங்குது எம்மனது – நீ
சீர் கொண்டு வந்ததாலே?
பெண் : சச்சரவுப் பேச்சுக்குச்
சந்தேகம் இல்லாம
எங்கப்ப செய்திட்டான்
ஆண் : உங்கப்ப செய்திட்டான்
எங்கப்ப வாங்கிட்டான்
தங்கப்ப மனசுதான்
தரிகதிம போடுதிங்கே.
பெண் : கோலாட்டம் போடுவிய
கோமகனே – என்னை
கோதையாக அழைத்திடடா
எந்தன் மாமன் மகனே.
Comments
Post a Comment