சர்க்கரையே…
வெண்ணிலா நீ
என் நிலா
அதைச் சொல்நிலா
எந்தன் வண்ண நிலா.
வெண்ணிலா நீ
கண்டதுண்டோ பகலோனை
பகலோனே நீ
கண்டதுண்டோ வெண்ணிலாவை.
முக்கனி சாறு
பிழிந்து
முச்சாரம் குடித்திட்டு
முழுமையாய் முந்நூறு
நாள்
சிறையிலிருந்து
முத்தாய் பிறந்தவள்
நீ
முத்தின் முதல்
உருவே
முதல்வனின் திருமகளே.
உன், எழில் உருவம்
என்
இதழில் துள்ள…
சொல்லில்லை
செயலில்லை
நாக்கிலே
என்,
உள்ளமது துள்ளி
வர
எண்ணமது கமழ்ந்து
வர
நெஞ்சமது நெகிழ்ந்து
வர
கொஞ்சம் நில்
– நீ
முந்தானை கட்டி
வர
முகிலோடு நாதம்
வர – அதன்
சந்தத்திலே என்னை
சேர்த்துக் கொள்
என்றால்
நீ,
முழு மதியாய்
முழு பகலாய்
நிற்கின்றாய்
– இது
தெரிந்துதான்
உனக்கு
பானுமதி யென்று
பெயர் வைத்தனரோ?
வைத்தவர் வாய்க்குச்
சர்க்கரை வேண்டும்
– அந்தச்
சர்க்கரையே நீ
என்பதால்
நான் எங்கு செல்வேன்.
Comments
Post a Comment