பாவம் பாரதி
நான்
கண்ட பாரிதி புரட்சிக் கவிதான்
பெண்ணுக்கு
வேண்டும் விடுதலை
மண்ணுக்கும்
வேண்டும் விடுதலை என்றார்.
மண்ணுக்குக்
கிடைத்தது விடுதலை – ஆனால்,
பெண்ணுக்குக்
கிடைத்தது வடுதலை தானய்யா.
வேண்டும்
விடுதலை என்றதொரு வேதம் வந்தது
வேண்டி
நிற்கும் காலம் போனது
வேடிக்கை
மனிதர் மாற வில்லை
வட்டி
கேட்கும் புத்தியும் போகவில்லை.
நீர்கண்ட
பாரதம் விலையாளிடம் இருந்தது
வீண்
போக வில்லை
நீர்
கேட்ட பாரதம் நம்மிடம் வந்தது
விலை
கேட்க வந்தனர் நம்மாளே.
பாவம்
பெண்ணைக் கண்டு
பாஞ்சாலி
சபதம் எழுதினாய் – இன்று
பாவையவள்
வாடுகிறாள்
Comments
Post a Comment