உருவாகின்றாள் புதுமைப்பெண்
நிலவே… ஓ… நிலவே…
நான் தினமும்
கண்விழிப்பது
உன்னைக் காணத்தான்
ஆனால், என்னால்
ஏன்
உன் முகத்தைக்
காணமுடியலே?
உன் திருவுருவம்
வெண்மையானதென்று
யாரோ சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
ஆனால், நான்
உன்னை நேரில்
காண
துடிக்கும் போதெல்லாம்
சிரைக்குள் ஏன்
மறைத்துக் கொள்கின்றாய்?
நீ வெட்கப்படுவதாய்த்தான்
எங்கள் கவிஞர்கள்
நினைத்துக் கொண்டு
உன்னைப் பெண்ணுக்கு
ஒப்பிடுகிறார்கள்,
நீ புதுமைப்பெண்
என்றல்லவா நினைத்திருந்தேன்
புத்திமாறிப்
போய்விட்டாயா?
புழக்கத்திற்குத்
திரும்பிவிட்டாயா?
வளர்ந்து வரும்
சமுதாயத்தில்
பெண்கள் சிலர்
வாழாவெட்டியாக
இருப்பதேன்?
கவி பாரதியின்
கனவுகள் எல்லாம்
கனவாகவே
கனிந்துவிட்டதோ?
உன் குரோமோசோம்களுக்கு
வீர மூட்டத்தான்
மூளை முடுக்கெல்லாம்
தேடுகின்றேன்
மூடி, மறைந்து
செல்கின்றாயோ?
நீ மறைந்து சென்றாலும்
என் எழுத்து முனையில்
உருவாக்குவேன்
புதியதொரு
புதுமைப்பெண்ணை.
Comments
Post a Comment