தலைவன் முடிவு


கண்ணஞ் சிவந்த புள்ளே

கடுகு வேவரக்குள்ளே

விண்ணை நாமறந்தேன்

வீதியிலே தான் திரிந்தேன்.

 

எண்ணங் கடந்த புள்ளே

கடலோரம் போரபுள்ளே

கடல நாமறந்தேன்

நடுக்கடலில் தான் திரிந்தேன்.

 

தென்றல் மறைவதில்லே

தேன்தமிழும் அழிவதில்லே

என்னை நாமறந்தேன்

ஏங்கி தான் தவிக்கின்றேன்.

 

சொல்லை வடித்தபுள்ளே

சொற்பொழிவு செய்தபுள்ளே

சொல்லில் எனைமறந்தேன்

செயலின்றித் தான் திரிந்தேன்.

 

கல்லைச் சமைத்தபுள்ளே

கலையே வளர்த்தபுள்ளே

கலைய நாமறந்தேன்

அலையைப் போலலைந்தேன்

 

அன்னம் வடித்தபுள்ளே

வண்ணந் தெரிந்தபுள்ளே

சுண்ணம் நாமறந்தேன்

கண்ணம் தேடி நின்றேன்

 

விண்ணிலே பறந்தபுள்ளே

கண்ணிலே தெரிஞ்சபுள்ளே

கண்ணை நாமறந்தேன்

கண்ணிழந்து தான் திரிந்தேன்

 

தோடுகம்மல் போட்டபுள்ளே

தோரணமாய்  நின்றபுள்ளே

தோத்திரங்கள் நாமறந்தேன்

சோம்பேறியாய்த் தான் திரிந்தேன்.

 

கரும்பும் இனிக்குமடி

கற்கண்டும் அதுக்குமடி

கருத்தும் நாமறந்தேன்

கற்பனையில் தான் திரிந்தேன்.

 

தும்பைப்பூ பல்லழகி

துண்டு முகத்தழகி

கண்டு நாமறந்தேன்

காணாமல் தான் திரிந்தேன்.

 

அத்திப் பொட்டழகி

அரளிப்பூ சிரிப்பழகி

கல்யாணி நாமறந்தேன்

கோவலனாய்த் தான் திரிந்தேன்.

 

சொத்தைக் கரந்தபுள்ளே

சொக்காய் போட்டபுள்ளே

அக்காவை நான்மறந்தேன்

நல்லதம்பி போல் திரிந்தேன்.

 

விஷயம் தெரிஞ்சபுள்ளே

வீம்புக்கு  வந்தபுள்ள

கம்பை நாமறந்தேன்

தள்ளாடி தான் திரிந்தேன்.

 

தென்னங் காற்றுபுள்ளே

தேங்காய் தின்றபுள்ளே

உன்னை நாமறந்தேன்

தனியாய்த் தான் திரிந்தேன்.

 

என்னை வெறுத்தேபுள்ளே

எண்ணையிலே போட்டபுள்ளே

என்னை நாமறந்தேன்

உயிரைத் தானிழந்தேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா