வளரும் தமிழ்

 

வளருகின்ற தமிழுக்குக்

          கொடிபிடிப்பதை விட்டுவிடு

வளரும் தமிழுக்கு

          உரமூட்டக் கைகொடு

எழுத்தில் சீர்த்திருத்தம்

          செய்து விட்டாய்

பழமையிலும் சீர்த்திருத்தம்

          செய்து விட்டாய்.

 

வள்ளுவனுக்கு ஓர்

          வள்ளுவக் கோட்டம்

கம்பனுக்கு ஓர்

          கம்பக் கோட்டம்

பாரதிக்கு ஓர்

          பல்கலைக் கழகம்

அவன் கொள்கைக்கும் ஓர்

          பல்கலைக் கழகம்

 

இதுமட்டும் போதுமா

          வளரும் நம் தமிழுக்கு

தென்றலிலே தமிழ்மணம்

          கமழுதல் வேண்டும்

தேனே என்று எல்லோரும்

          அழைத்திடல் வேண்டும்

கனவுப் பேச்சிலும்

          தமிழே பிறக்க வேண்டும்

 

இன்னும்பல காப்பியங்கள்

          தோன்றல் வேண்டும்

ஆய்வுகள் அதனினுமதிகமாய்ப்

          பெருகுதல் வேண்டும்

காப்பியங்கள் ஆய்வுகளெல்லாம்

          பிறமொழிப்படுத்தல் வேண்டும்

அதற்குத் தமிழ் பயின்றவரெல்லாம்

          பிறமொழி கற்றல் வேண்டும்.

 

தமிழனுக்குப் பெருமை

          அவன் வாழ்த்துச் செய்தியல்ல

மேனாட்டார் வாழ்த்தும்

          வாழ்த்துச் செய்தியல்லவா

அகத்தின் ஒழுக்கத்தினைப்

          புறத்தார்க்கு எடுத்துரைத்து

புறத்தாரின் அகமெல்லாம்

          தமிழ் தமிழ் எனல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா