சூரியனைச் சுட்டெரிக்கும் சுடர் விளக்குகள்


தித்திக்கும் தென்கனியே, திகட்டாத செங்கனியே

எத்திக்கும் புகழ்மணக்கும் தமிழ்த் தாயே

உன்புகழ் போற்றி வணங்குகின்றேன்.

 

வங்கக் கடல் அணைத்தெடுக்கும்

வள்ளல் மகளே, வேங்கையின் தாயே

உனைப் போற்றி வணங்குகின்றேன்.

 

பொதுமைக்கு வள்ளுவனையும்

புதுமைக்குப் பாரதியையும்

கற்பனைக்குக் கம்பனையும்

இனிமைக்கு இளங்கோவையும்

பெருமைக்கு எங்களையும்

ஈன்று வளர்ப்பவளே

எந்தாயே, தமிழ்த் தாயே

உன்பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

 

சிந்தை தெளிய வைக்கும் சித்தக்காரியே

என் சிங்காரியே கன்னித் தமிழே

உன் வடிவம் போற்றி வணங்குகின்றேன்

 

தொட்டுத் தொட்டு மதிப்பளிக்கும்

அவை மேலாளர் அவர்களுக்கும்

என்கவி கேள அமர்ந்திருக்கும்

தென்னகச் சிங்கங்களே

சிப்பாய்த் தோழர்களே

உங்களுக்கும் என் வணக்கங்கள்

கோடிபல உரித்தாகும்.

 

கம்பன் கற்பனையாம்

காவிய போதனையாம்

கற்பின் நாயகியாம்

கண்ணகியின் பார்வையிலே

சுடர்விளக்காய் எரிந்ததன்று

மதுரை மாநகரே

 

சூரியனின் துணையில்லாமல்

சுதந்திரமாய் வாழ்ந்திடலாம்

சிறியதொரு தீக்குச்சியாலே

சிறுபான்மையும் அழிந்துபோகும்.

 

ரோட்டிலோடும் பேருந்தில்

ஒட்டி உரசும் காளையர்களை

எட்டிப் பார்க்கும் பாவையவள்

பாவமாய் நின்றிருந்தால்

படும் தொல்லைக்கு ஆளாவாள்

கொடுஞ் சொல்லுக்குப் பொருளாவாள்

புதுமைப்பெண் எழுந்து வந்தால்

பேருந்தோ சாம்பலாகும்.

 

ஜாக்கெட்டில் கொஞ்சம்

கிழிசல் இருந்துவிட்டால்

சூரியன் புகமுடியாத இடத்தில் கூட

அந்தக்,

காமுகனின் காம ஒளி புகுந்துவிடும்.

 

வானத்தில் நீ சுடர்விட்டு எரிந்தாலும்

எங்களுக்குக் கவலையொன்றுமில்லை

வன தேவதை எங்கள் கைகளில்

நாட்டியமாடுகின்றாள்

சுருதியில் சில தவறுகள் ஏற்படும் போதுதான்

எங்கள் கைகள் துண்டிக்கப்படுகின்றன.

 

மெழுகுவர்த்தி அழகானதென்று

அழகுபடுத்தி எடுத்து வந்தேன்

அந்தப்புரம் வீற்றிந்தேன்

அவள் மனம் மாறுமென்று

அல்லல்பட்ட தோழர்தனைப்

போருக்கு அழைத்து நின்றேன்

போதையோடு போரிட்டதால்

பொசுங்கிப் போனேன் நாணோடு.

 

கொட்டும் ஓசையிலே

தட்டும் கைகளிங்கே

கொட்டும் என்றிடுவேன்

கோண விழிப் பார்வையரை

விட்டும் நான் சென்றிடேன்

வீழும், அவர் வாழ்வு வரை.

 

வழக்கேனும் வழக்குகள் யாவும்

வாழாமல் இருந்துவிட்டால்

ஆயிரம் சுடர் விளக்குகள்

அணையா விளக்குகளாகும்.

 

தென்றலைத் தீண்ட மறந்த சூரியன்கூட

எங்கள் நாட்டுச்

சிவப்பு விளக்குகள் தீண்டுகின்றன. 

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா