நிலவே… நிலவே…
நிலவே
உன்னைச் சுற்றி
ஆயிரமாயிரம்
நட்சத்திரங்கள்
நட்புக் கொள்கின்றன.
இங்கும்,
என்னைச் சுற்றி
ஆயிரமாயிரம்
மின்மினிப் பூச்சிகள்
ரீங்காரம் செய்கின்றன.
நட்சத்திரமே
நீயும் இதுபோல்
நிலவைச் சுற்றி
ரீங்காரம் செய்கின்றாயா?
நிலவே
உன் வரவிற்குப்
பூக்கள் பல – தன்
இதழ்விரித்துத்
தென்றலிலே
மணம் பரப்பி நின்றதாலே
உன் வரவிற்கு
நாங்கள்
பந்தலிட்டு
மாங்கல்யத் தலையினிலே
சொந்தம் கொண்டு
பாங்காய் வரவேற்கின்றோம்.
நிலவே
உன்னை நான்
கோபத்தில் காணத்
துடிக்கின்றேன்.
ஏன்?
உனக்குக்
கோபமே வருவதில்லையா?
உன்னிடம் குளிர்ச்சி
அதிகமென்பதால்
கோபமது
அதனிடம் தஞ்சமடைந்துவிட்டதோ?
இல்லை,
எங்களுக்காக
உன் கோபங்களைத்
தர்க்க மாக்கி
குளிர்ச்சியே
நானென்று
உறுதி அளிக்கின்றாயா?
Comments
Post a Comment