காதலிலே…
காத்திருந்த
கண்கள் இரண்டு
கனியவே
நின்றேன் இங்குக்
கள்ளியவள்
சொல்லிட்டாள்
கருப்பு
நேரம் வரட்டுமென்று.
கற்பு
இல்லை என்றே
கருத்தோடு
சொல்லிட்டு
கனிவோடு
நின்றாள்
கருத்தோடு
அனுப்பி விட்டேன்.
காதலிக்க
ஆள்வேண்டி
கால்நோக
நின்றிட்டேன்.
கரவைமாடு
வந்ததைக் கண்டு
கால்
நோக ஓடிவிட்டேன்.
காதல்
செய்யும் பித்தருக்குக்
கன்னிகளே
கிடைத்துவிட்டாள்
காலத்தால்
ஒன்றுமில்லை
காதலிக்க
பயமுமில்லை.
காதல்
செய்ய பாக்கியம் வேண்டும்
ஊடல்
செய்ய அமைதி வேண்டும்
பாதகம்
செய்யத் துணிவு வேண்டும்
ஊடகம்
செய்ய அறிவு வேண்டும்.
காதல்
இல்லையேல் சாதல் வேண்டும்
கூற்றை
மாற்றி நாற்றைப் போல
பாதையுண்டு
வேறுவழி செல்ல.
Comments
Post a Comment