அறிவிழந்தோம்
மையுண்ட விழிக்கு
மையல் வந்ததால்
தையல் ஒளிக்குத்
திரையிட்டுக் கொண்டது.
கவ்விய ஒளியோ
கண்ணுள் போனதால்
எஞ்சிய இடமெல்லாம்
இருளே படர்ந்தது.
இருளைப் படைத்தாய்
ஒளியைக் கண்டோம்
அதுவும் பறித்தாய்
அறியா நின்றோம்
வழியைப் பறித்தாய்
வழுக்கி விழுந்தோம்
விழுந்த உடனே
அறிவும் இழந்தோம்.
Comments
Post a Comment