திருமண நாள் வாழ்த்து
கண்ணாடி போல் ஒளிரும்
தண்ணீரின் மேனியிலே
தலைவாரிக் கொள்வதற்குத்
தாமரைப்பூ நின்றிரும்.
விண்ணில் வரும்
மதியைப்போல்
வண்ணமகள் உனக்காகவே
வாழ்க்கையினைச்
செப்பனிட்டு
வழிநடத்தவே நின்றிருப்பாள்.
காவியங்கள் நாட்டில்
பல
கவிதைகள் அதிலும்
பல – உன்
தவிப்புகள் பல
அடங்கி
தவப்புதல்வா நீ
வாழீ.
என்று,
வாழ்க்கையினை
விளக்க வந்த
வாழ்க்கைத் துணைவியையும்
நின்னையும் சேர்த்தே
வாழ்த்துகிறேன்
திருமண நாளிலே.
Comments
Post a Comment